அமைச்சர்களிற்கு உயிர் அச்சுறுத்தல்: சுரேஸ் சாலே கைது!
இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஸ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் துவான் சுரேஸ் சாலே, இன்று காலை கைது செய்யப்படடிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுடன் இணைந்து புதிதாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில்; கைது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் அதற்குப் பொறுப்பான மற்றவர்கள் பற்றிய தகவல்களைக் கண்டறிய அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஊடகங்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை ஆட்சிக்கதிரையிலேற்ற முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் துவான் சுரேஸ் சாலே, அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment