ரணிலின் பாரியாருக்கும் விசாரணையாம்?




முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராக அவரது மனைவிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதனிடையே ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.

தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார்.

சமன் ஏக்கநாயக்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார்.


No comments