பிரஜா சக்தி : வெறும் பம்மாத்து!
தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள "பிரஜா சக்தி" என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என வடகிழக்கிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்ற.
தமிழ் கட்சிகள் வசமுள்ள சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபையும் ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பிரஜா சக்தி திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது.
மேலும் "பிரஜா சக்தி" திட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான ஏற்பாடாக இருக்கவில்லை.
ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், அதிகார மோசடிகள், இடம்பெறாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முழுமையாக அத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் மேற்கொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.

Post a Comment