இந்திய இராணுவ பாலம் ஆடுகின்றதாம்?
இந்திய அரசு டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கென கிளிநொச்சியில் பெரும்பரப்புiரைகளுடன் அமைத்து வழங்கிய பாலம் பொதுமக்கள் பயணிக்க அபாயகரமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இந்திய படைககளினால் அமைத்து வழங்கப்பட்ட பாலம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலமானது அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தது.
இந்நிலையில், அண்மைக்காலமாக பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து கனரக வாகனங்களுக்கான போக்குவரத்துக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும் பாலத்தினூடாக பயணிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து சேவையானது பயணிகளை இறக்கி விடப்பட்டு பின்னர் பாலத்தினூடாக பயணிக்க முடியும்.ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் பயணிக்க முடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Post a Comment