இனி இலங்கையில் ஓய்வூதியமில்லை!
முன்னாள் ஜனாதிபதிகள்,அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆதரவளித்துள்ளது.
அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட "நாடாளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல்" எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் அன்று அறிவித்திருந்தார்.
சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லையென்பதால் அதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையொன்றின் மூலம் நிறைவேற்றப்படலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென கட்டளையிடுவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்

Post a Comment