கோத்தா வெளியே வரவேண்டும்?
பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தராது பதுங்கியுள்ள நிலையில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அவரை முன்னிலைப்படுத்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச் செய்யுமாறும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டத்தினை நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று யாழ்ப்பாண நகரில் இடம் பெற்றிருந்தது.
அப்போராட்டத்தில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்பு காரணங்களை காட்டி கோட்டபாய ராஜபக்ச நீதிமன்றுக்கு வருகை தராமை கண்டனத்துக்குரியது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் மார்க்கிசய லெனினியகட்சி மற்றும் சம உரிமை இயக்கம் மற்றும் தெற்கை மையப்படுத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்திருந்த கோத்தபாயவும் யாழ்.நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சந்தேக நபராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment