குமாரபுரம்:30வது ஆண்டு நினைவேந்தல்!
திருகோணமலையின் குமாரபுரம் படுகொலையின் 30வது ஆண்டைய நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குமாரபுரம் கிராமத்தில் கடந்த 1996 ம் ஆண்டின் இதே நாளன்று படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் நினைவேந்தல் நிகழ்வு குமரபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
படுகொலையான உறவுகளிற்கான பொது சுடர் குடும்பத்தவர்களினால் ஏற்றப்பட்டிருந்தது.
தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்படடிருந்தது.
நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களால் "உள்ளக நீதிப் பொறி முறையில் நம்பிக்கை இல்லை" சர்வதேச நீதிப் பொறி முறை ஊடாகவே குமரபுரம் படுகொலைக்கு நீதி வேண்டும்" என வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment