தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!
வடக்கு கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் எந்த ஒரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தாராளமாக கையிருப்பில் உள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் தலைவர் டி.ஜே.கருணாரட்ன சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க- இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போரை ஆரமிபித்ததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் பலரும் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்திடம் மாத்திரம், போதுமான அளவு ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருட்கள் உள்ளதாக கருணாரட்ன கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் மூன்று பெற்றோலிய நிறுவனங்கள் உள்ளன.
1) இந்தியாவின் Lanka IOC
2) சீனாவின் Sinopec
3) இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் (Lanka Ceylon Petroleum Corporation- CEYPETCO)
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூன்று நிறுவனங்களும் மத்திய கிழக்கில் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வதில்லை.

Post a Comment