புங்குடுதீவில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது
புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அந்நிலையில் , பொலிஸார் புங்குடுதீவு பகுதியில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, கூரிய ஆயுதங்களை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் உடைமையில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் கஜேந்திரா கோடரி என்பவற்றை பொலிஸ் நிலையம் எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட இருவருடனும் சேர்ந்து இயங்கிய சிலரை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment