ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு


களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது. 

பந்துல பிரசன்ன என்பவரை குறி வைத்தே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த  வேட்பாளரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் பிஸ்டல்களுக்குப் பயன்படுத்தப்படும்  தோட்டா ஒன்றும், கைப்பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments