யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது - இருவருக்கும் எதிராக ஏற்கனவே நீதிமன்றில் வழக்குகளும் உள்ளன
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் , மயிலங்காடு பகுதியில் 100 போதை மாத்திரைகளுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக நீதிமன்றங்களில் போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment