இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
பதிவு இணையத்தளத்தின் அன்புக்குரிய வாசகர்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் எமது இதயம் கனிந்த தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்
புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.உழைப்பின் உயர்வையும், இயற்கையின் கொடையையும் போற்றும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல், உங்கள் இல்லங்களில் வளத்தையும் நலத்தையும் கொண்டு வரட்டும். பொங்கும் பொங்கலைப் போல உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி ததும்பி வழியட்டும்.
கடந்து வந்த பாதையில் நாம் கற்ற அனுபவங்களுடன், புதிய நம்பிக்கையோடும் புத்துணர்வோடும் இந்தப் புதிய ஆண்டை வரவேற்போம். உங்கள் கனவுகள் மெய்ப்படவும், நல்வாய்ப்புகள் பெருகவும் வாழ்த்துகிறோம்.
எமது செய்திகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்து ஆதரவு அளித்து வரும் வாசகர்களாகிய உங்களுக்கு இத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன் பதிவு!

Post a Comment