கிறீஸ் பிஸ்கட் தொழிற்சாலையில் தீ விபத்து: நால்வர் பலி!
மத்திய கிறீசில் உள்ள ஒரு பிஸ்கட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது நாட்டின் மிக மோசமான தொழில்துறை விபத்துகளில் ஒன்றாகும்.
ஆறு ஊழியர்களும் ஒரு தீயணைப்பு வீரரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் உயிருக்க ஆபத்து இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஏதென்ஸிலிருந்து வடமேற்கே சுமார் 245 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திரிகலா நகருக்கு வெளியே உள்ள வயலண்டா தொழிற்சாலையின் எரிந்த எச்சங்களை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின.
இரவுப் பணியின் போது உணவு உற்பத்தி ஆலையின் ஒரு பிரிவில் அதிகாலை 4 மணிக்கு சற்று முன்பு தீ விபத்து ஏற்பட்டது, அதே நேரத்தில் 13 பேர் உள்ளே இருந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தீ விபத்துக்கு முன்னதாக ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதாகவும், தொழிற்சாலை கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து விழுந்ததாகவும் தீயணைப்புப் படையினரின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment