முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு என முறைப்பாடு
பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலய பகுதியில் அமைந்துள்ள புனிதமான இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது
ஆனால் புது குடியிருப்பு பிரதேச சபையின் கவனயீனத்தால் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் புது குடியிருப்பு பிரதேச செயலகமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை குறிப்பாக அதற்கான ஒரு சுத்திகரிப்பாளர் நியமித்து அதற்கான சுகாதாரங்களுக்குரிய வளங்களை கொடுத்து சுத்திகரிப்பு செய்வது பயணிகளுக்கும் சிறப்பு அதேசமயம் இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார்.
அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவன் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது முறிகண்டி ஆலய நிர்வாகத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பது சிறப்பு எனவும் பாபு சர்மா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Post a Comment