வெனிசுலாவின் இடைக்கால அதிபராக ரோட்ரிகஸை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது
அமெரிக்காவினால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் இல்லாத நிலையில், துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க நடவடிக்கையின் போது நேற்று சனிக்கிழமை அதிகாலை மதுரோ கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்வாக தொடர்ச்சியையும் நாட்டின் விரிவான பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, வெனிசுலாவின் பொலிவேரியன் குடியரசின் ஜனாதிபதி பதவியை ரோட்ரிக்ஸ் ஏற்றுக்கொள்வார்.

Post a Comment