கைபேசி பயன்பாடு - தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு


காலி - உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார்.

தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியாவார். 

உயிரிழந்த சிறுமிக்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட இந்தத் தர்க்கத்தின் போது, தந்தை மன்னா கத்தியால் தாக்கியத்தில் படுகாயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பில் தந்தையை கைது செய்துள்ள உரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments