காலியில் துப்பாக்கி சூடு - இளைஞன் உயிரிழப்பு


காலியின் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்  

அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இனந்தெரியாத இருவர், இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் கலபொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை போலீசார்  மேற்கொண்டு வருகின்றனர். 

No comments