டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
திருகோணமலையில் டிப்பர் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெஹிவத்தை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களும் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானர்கள் .
அதன் போது அப்பகுதியை சேர்ந்த எம், ஏ. சாமிக்க அசான் (வயது 21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றைய இரு இளைஞர்களுடன் படுகாயமடைந்த நிலையில் , மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment