புலம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிக்க உரிமையில்லையா?
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களும் வாக்களிக்க முடியுமென்ற இலங்கை அமைச்சரவை அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.வாக்களிக்கத் தகுதியானோர் பற்றிய விபரங்களோ ஐரோப்பிய, மேற்கு நாடுகளில் வாழ்வோர் வாக்களிக்க முடியுமா என்பது தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு, தேர்தல் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்வது தொடர்பாக செப்டெம்பர் மாதத்தில் இடம்பெற்ற அமைச்சவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
தீர்மானம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதத்தை குழு அனுப்பியுள்ளது.
தங்கள் பிரதேசங்களில் இருந்து, வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றிய விபரங்களை வழங்குமாறு கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை கூட்டம் முடிவடைந்து, இரண்டரை மாதங்களின் பின்னர் அதுவும், முடிவுத் திகதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான், கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் கடிதங்களை குழு அனுப்பியிருக்கிறது.
அதாவது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க முடியும் என்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானம் விளக்கமாக கடிதத்தில் இல்லை.
அவை பற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் இதுவரை விளக்கம் கோரவுமில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Post a Comment