ரணில் மீண்டும் உள்ளே?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாவது சந்தேக நபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் லண்டன் பயணங்களுக்காக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படடுள்ளார்.

Post a Comment