வாயாலே வடை :அனுர ஆட்சி!
ஜனாதிபதி புயலால் பாதிக்ககப்பட்டவர்களிற்கு காணி தருவதாக, வீடு தருவதாக, நஸ்ட ஈடு தருவதாக ஏதோவெல்லாம் சொன்னார். ஆனால் கேவலம் ஆரம்ப கொடுப்பனவான 25ஆயிரம் ரூபாய்கூட எங்களுக்கு தரவில்லையென மலையக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அண்மையில் இலங்கையை உலுக்கிய அனர்த்தங்களினால் இடம்பெயர்ந்த மலையகத் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பான காணி மற்றும் வீடுகளைக் கோரி கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு ஒன்றையும் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்திருந்தனர்.
மாத்தளை மாவட்டத்தையும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களுமே போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி காணி தருவதாக, வீடு தருவதாக, நஸ்ட ஈடு தருவதாக ஏதோவெல்லாம் சொன்னார். ஆனால் கேவலம் ஆரம்ப கொடுப்பனவான 25ஆயிரம் ரூபாய்கூட எங்களுக்கு தரவில்லை, தங்குவதற்கு இடமில்லாமல் இன்னும் கோயிலில் இருக்கிறோம், எங்கள் மீது பாரபட்சம் காட்டாதீர்கள்” என்று மலையக தமிழ் உறவுகள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

Post a Comment