இனி இலங்கையில் ஓய்வூதியமும் இல்லை!
தேசிய மக்கள் சக்தியின் உறுதிப்பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய,இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது

Post a Comment