வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவி கைது! வெனிசுலா மீது அமெரிக்கா பெரும் தாக்குதல்கள்!
வெனிசுலாவின் விமானத் தளங்கள், துறைமுகங்கள், ஆயுததளபாட களஞ்சியப் பகுதிகளில் பொிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் உலகம் ஒற்றுமையுடன் அணிதிரள வேண்டும் என்று வெனிசுலா வெளியுறவு அமைச்சர் யுவான் கில் பின்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
எல்லைகளில் படைகளை குவிக்கிறது
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ்
மதுரோவைக் கைப்பற்றியதாகக் கூறப்படும் அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து,
வெனிசுலா எல்லையில் இராணுவப் படைகளை நிலைநிறுத்த உத்தரவிட்டதாக கொலம்பிய அதிபர்
குஸ்டாவோ பெட்ரோ சனிக்கிழமை தெரிவித்தார்.
தாக்குதலுக்கு எதிரான கண்டனங்கள்
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் கண்டிக்கத்தக்கதுஎன்று ரஷ்யா கூறுகிறது. இது ஆயுத ஏந்திய பயகரவாதச் செயல் என்று ரஷ்யா முத்திரை குத்திரை குத்தியது.
வெனிசுலா மீதான அமெரிக்க இராணுவத் தாக்குதலையும், நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதையும் ஈரான் கடுமையாகக் கண்டிக்கிறது.
வெனிசுலாவிற்கு எந்தவிதமான அழிவுகரமான, இராணுவ, வெளிப்புற தலையீடு இல்லாமல், அதன் சொந்த விதியை தீர்மானிக்கும் உரிமை உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐநா கூட்டத்திற்கு அழைப்பு
அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கோருகிறது என்று வெளியுறவு அமைச்சர் யுவான் கில் பின்டோ தெரிவித்துள்ளார்.


Post a Comment