யாழில். எஸ்.ரி.எப் பின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் முன்பாக விசேட அதிரடிப் படையினர் அணியும் காற்சட்டடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தவரே கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment