பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்


மோட்டார் சைக்கிளில் பயணித்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கத்தோலிக்கப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டதெனியாவவில் உள்ள ஒரு பண்ணையில் உதவி தோட்ட நிர்வாகியாகப் பணிபுரியும் அருட்தந்தை, திப்பிட்டிகொட தேவாலயத்தில் வழிபாட்டை நடத்திவிட்டுத் திரும்பும் போதே தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு இலக்கான மதகுரு, நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ள நிலையில் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 06 பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் மன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

No comments