எழுவைதீவில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருட்டு
யாழ்ப்பாணம், எழுவைதீவில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான ஐம்பொன் விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் காணப்பட்ட வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய ஐம்பொன்களால் ஆனா இரு எழுந்தருளி விக்கிரகங்களும் களவாடப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் , பொலிஸார் எழுவை தீவுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடல் கடந்த தீவான எழுவை தீவுக்கு படகில் மாத்திரமே பயணம் செய்ய கூடிய நிலைமை உள்ளமையால் , களவாடப்பட்ட விக்கிரகங்கள் எழுவைதீவை விட்டு வெளியே எடுத்து செல்லப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் குறைவாக காணப்படுவதனால் , குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து சிலைகளை மீட்க முடியும் என ஊர்காவற்துறை பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post a Comment