தையிட்டி விகாரைக்கு எதிராக போராடிய வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேருக்கு எதிராக வழக்கு
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று அழைப்பு கட்டளை அனுப்பியுள்ளது.
தையிட்டி விகாரை முன்பாக கடந்த 21ஆம் திகதி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் தர்க்கப்பட்டு , அமைதியின்மை ஏற்படுத்தப்பட்ட நிலையில் , வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு எதிராக பலாலி போலிசார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் , குறித்த வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment