தையிட்டி விகாரை விவகாரம் - களத்தில் நயினாதீவு விகாராதிபதி ; இன்று யாழ். மாவட்ட செயலரை சந்தித்தார்.
நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார்.
மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலரிடம் தெரிவித்தார்.
தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு சொந்தமானவை எனவும் , அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியை தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும் , தற்போதுள்ள தையிட்டி விகாரையை தன்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைந்து 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்கு தனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment