தமிழ்நாடு 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
'டித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக
டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது.
இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார்.
அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



Post a Comment