மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசுக்கு வழங்கிய நற்சான்றுஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டி! பனங்காட்டான்

வெளிநாட்டு தூதுவர்களை சந்திப்பதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார் சஜித். மாகாணசபை தேர்தல் மூலம் நிவாரணம் பெற தமிழரசுக் கட்சி

முயற்சி. பேபி நாமல் அரசியலில் இன்னமும் புட்டிப்பால் குடிக்கிறார். 

மழை விட்டும் தூவானம் போகவில்லையென்பது ஒரு வாழ்மொழி. மழை நிலத்தை நனைக்கும் வெறும் தண்ணீர் அல்ல. மனிதனின் அன்றாட வாழ்வுக்கு அத்தியாவசியமானது. 

ஆனால்இ மழை காற்றுடன் இணையும்பொழுது அதன் வீச்சு வேறாகிறது. மழை தூறுகிறதுஇ மழை பெய்கிறதுஇ மழை பொழிகிறது என்ற சொல்லாடல்கள் ஊடாக தென்றலுக்கும் புயலுக்கும்இ சூறாவளிக்குமிடையிலான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம். சூறாவழியால் ஏற்பட்ட அனர்த்தத்தை இலங்கை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசமும் இதனை உணர்ந்து உதவிக் கரங்களை நீளமாக நீட்டுகின்றன. 

தேசிய மக்கள் சக்தி அரசு அநுர குமர தலைமையில் கண்களை மூடிக்கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறது. இதற்கு ஏதுவாக உலகம் தாராளமாக உதவுகிறது. அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்க்கும்போது நாடு வழமைக்குத் திரும்ப பல மாதங்கள் அல்லது வருடங்கள்கூட ஆகலாம். 

இலங்கை எல்லோருக்கும் பொதுவானது என்பதை எடுத்துக்காட்ட (இதுவும் ஒருவகை அரசியல்தான்) கடந்த 12ம் 13ம் திகதிகளில் இடம்பெறவிருந்த இலங்கையர் தினம் என்னும் தேசிய நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிடுகிறார். சிறுவர் முதல் முதியோர் வரையானவர்களை அணைத்து ஆறுதல் கூறுகிறார். குடும்ப உறவுகளை இறந்தவர்களுக்கு தேறுதல் கூறி உடனடி நிவாரணத்துக்கு உத்தரவாதம் வழங்குகிறார். 

மத்திய மாகாணத்தின் பெரும்பகுதிகளே பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. மண் சரிவுகளில் அகப்பட்டு காணாமல் போயுள்ள சுமார் 200க்கும் அதிகமானவர்களுக்கு இறப்புப் பதிவு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பெறுபவர்களுக்கு தாமதமின்றி அதற்கான நிவாரணம் கிடைக்குமாம். வீடுகளை சுத்தப்படுத்த 25இ000 ரூபாஇ மேலதிக செலவுகளுக்கு 50இ000 ரூபாஇ உயிரிழப்புகளுக்கும்இ வீடழிப்புகளுக்கும் நிறைவான நிவாரணம். ஜனாதிபதி உத்தரவில் அரச இயந்திரம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கும் என்ற ஆராய்ச்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் சக்தியை செலவழிக்கின்றன. 

நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலர் இன்னமும் தங்கள் தொகுதிகள் பக்கமே போகவில்லை. தங்கள் வாக்குகளால் எம்.பியானவர்களைத் தேடி தொகுதி மக்கள் நெடுமூச்சு விடுகின்றனர். எந்தவொரு நாடாளுமன்ற எம்.பியாவது தங்களின் ஒரு மாதச் சம்பளத்தைக்கூட நிவாரண நிதிக்கு வழங்கியதாக இதுவரை தெரியவில்லை. அர்ச்சுனா இராமநாதன் தமது பங்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அவ்வப்போது எங்காவது சென்றுவிட்டு ஊடகங்களில் செய்தி போடுகின்றனர். 

ஒரு நாள் மழைக்கு ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய எம்.பிக்களின் காலம் முன்னர் இருந்தது. 1978ம் ஆண்டு சூறாவளியின்போது எம்.பிக்களின் தாராள நிதி உதவியை நேரில் தரிசித்த சாட்சி இந்தப் பத்தி எழுத்தாளர். ஆனால்இ இன்று நிலைமை அப்படிக் காணப்படவில்லை. 

உலக நாடுகள் முன்னர் வழங்கிய உதவி போதாது என்று மேலும் மேலும் வழங்கி வருகின்றன. சில நாடுகள் இரண்டாம் முறையாகவும் வழங்குகின்றன. மேலும் உதவிக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. இலங்கையின் மீட்பு முயற்சிக்கு இலங்கைப் பணத்தில் ஆயிரம் கோடி ரூபாவை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை இணங்கியுள்ளதாக அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே கூறியுள்ளார். அதேசமயம் இனி வரக்கூடிய காலநிலை மாற்ற பேரிடர்களை எதிர்கொள்ள முதலீடுகள் தேவையென்று அநுர அரசுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளார். 

பேரிடரிலிருந்து இலங்கை மீள்வதற்கு அரசு கேட்ட 200 மில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவெடுத்துள்ளது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்துக்கு 200 மில்லியன் டாலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் கட்சிகளின் பாரிய கடமை. தொல்பொருள்இ வனபரிபாலன திணைக்களங்கள் இவ்வாறான நிதிகளில் தங்கள் கைங்கரியங்களை நிறைவேற்றக்கூடிய அபாயம் உண்டு. இதற்கு கடந்த காலஇ நிகழ்கால அனுபவங்கள் பல உள்ளன. 

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் ஒன்றிணைந்து தங்கள் சொந்தப் பணத்தில் 3.6 மில்லியன் ரூபாவை நிவாரணத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது முற்றிலும் முன்மாதிரியான ஒரு செயற்பாடு. அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலாளர் அலிசன் கூக்கர் இப்போது இலங்கையில் நிற்கிறார். அமெரிக்காவின் சி-130 உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் இவரது வருகை அதனுடன் சேர்ந்துள்ளது. 

ஜனாதிபதி அநுர குமரவை நேரில் சந்தித்து உரையாடிய இவர்இ இலங்கையின் மீள் எழுச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்க தயார் என்று உறுதியளித்துள்ளார். ஆங்கிலத்தில் பிளாங் செக் என ஒன்றுண்டு. ஒரு தொகையுமே குறிப்பிடாது வழங்கப்படும் காசோலை என்பது இதன் அர்த்தம். அதாவதுஇ காசோலையின் பெறுனர் தமக்குத் தேவையான தொகையை இதில் எழுதலாம். அவ்வாறான உத்தரவாதம் அலிசன் உடையது. இது தவிரஇ இலங்கை மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் தீர்வை வரியை ரத்தாக்குவது அல்லது குறைப்பது பற்றியும் அமெரிக்கா ஆலோசிப்பதாக கூறியுள்ளார். 

இந்தியாஇ சீனா போன்ற நாடுகள் வழங்கும் உதவிகளுக்கு நிகராக அல்லது அதனிலும் மேலாக அமெரிக்க உதவி கிடைக்கலாம்போலத் தெரிகிறது. ஏற்கனவே சி-130 நடவடிக்கைகள் மீது பலரும் ஐயம் வெளியிட்டு வரும் வேளையில் அமெரிக்காவின் அளவு கடந்த உதவிகள் மேலும் அச்சமூட்டுவதாக அமையலாம். முதலாளித்துவ மேலாண்மை கொள்கைகளைக் கொண்ட நாடுகளை எதிர்த்து வந்த ஜே.வி.பி.யின் பினாமி ஆட்சிக்கு அமெரிக்கா உதவுவது என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. உதவி எங்கிருந்து வந்தாலும் அதை தட்டிக்கழிக்க முடியாத நிலை இலங்கையினுடையது. இதனால் அரசியல் சித்தாந்தங்களை வெளிப்படுத்தி கிடைக்கும் உதவிகளை வெட்டுவதற்கு சிலர் முயற்சிப்பது கண்கூடு. 

கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல் புரிந்துஇ கொள்ளையடித்து பொத்தி வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியைக்கூட நிவாரணத்துக்கு வழங்க உள்நாட்டு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. ஆனால்இ இவர்கள் வெளியிட்டுவரும் கருத்துகளும் அபிப்பிராயங்களும் அரசாங்கத்தைச் சாடுவதாகமும் மக்கள் மத்தியில் ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க நினைவு நிதியத்திலிருந்து 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதுடன் அவசியமற்ற தப்பபிப்பிராயங்களை பரப்ப வேண்டாமெனவும் வேண்டியுள்ளார். 

மகிந்த ராஜபக்ச திடீர் நோய்வாய்ப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உள்ளாகியுள்ளார். இவரது பொதுஜன பெரமுன விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் பேரிடர் உயிர்ச் சேதங்களுக்கு ஆளும் தரப்பே முழுப்பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு பேரிடர் விடயத்தில் தாமதமானது என்பது உண்மை. அதனை ஆட்சித்தரப்பே ஒருவகையில் ஒப்புக்கொண்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே பேரிடர் எச்சரிக்கை வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பது சகல எதிர்க்கட்சியினரதும் குற்றச்சாட்டு. எச்சரிக்கை ஏற்கனவே வழங்கப்பட்டதென்றால் இது விடயத்தில் அரசாங்கத்தைச் சுட்டி நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றம் எதிர்க்கட்சிகள் மீதும் விழுகிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

முள்ளிவாய்க்கால் அழிவின் பின் பாதிக்கப்பட்டவர்களை ராஜபக்ச அரசு மீளக்குடியேற்றியது என்று சுட்டிக்காட்டியுள்ள நாமல் ராஜபக்சஇ அநுர அரசு இப்போது ஏன் அவ்வாறு செயற்படவில்லை என்று கேட்டிருக்கிறார். முள்ளிவாய்க்கால் போரில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுககள் இத்தனை ஆண்டுகளாக வீதிகளில் நிற்பதை இவர் அறியவில்லைப் போலும். பேபி நாமல் பாவம்! இன்னமும் அரசியலில் புட்டிப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தூதுவர்களைச் சந்திப்பதில் மினக்கெடுகிறார். இவர்களை சந்திப்பதை ஊடகங்கள் ஊடாக படம் காட்டுகிறார். எல்லாவற்றிலுமே குறை காண்பவராக மல்லுக்கட்டுகிறார். இவரது கட்சி நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக எங்கும் காணப்படவில்லை. 

எல்லாவற்றிலும் மேலானது தமிழர் தரப்பில் இடம்பெறும் அதிரடிகள். நிவாரணப் பணிகளைவிட இவர்களின் அறிவார்ந்த நிலைப்பாடு நிச்சயம் சொல்ல முடியாத மாகாணசபை தேர்தல். முன்னைய உள்ளாட்சித் தேர்தலின்போது வெளியேறியவர்களை (வெளியேற்றப்பட்டவர்கள்) மீண்டும் தமிழரசுடன் இணைப்பதற்கான முதற் கூட்டம் முடிவடைந்துள்ளது. இது ஒரு தொடர்கதையாகுமாம். இச்சந்திப்பின் பிறையோரிட்டி தமிழரசின் சுமந்திரனை மாகாணசபை தலைவராக்குவது. இதற்காக எந்த விட்டுக்கொடுப்புக்கும் தமிழரசு இறங்கியுள்ளது. 

பேரழிவின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அநுர அரசின் நிகழ்ச்சிப் பட்டியலில் இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லையென்று பெலவத்தை வட்டாரங்கள் சொல்லுகின்றன. இவ்வேளையில் மல்வத்தஇ அஸ்கிரிய பீடாதிபதிகள் அநுர அரசின் துரித நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ள நற்சான்றிதழ் இந்த ஆட்சியின் நீட்சிக்கான வழிகாட்டியாகத் தெரிகிறது. 

No comments