பிரித்தானியா டார்பியில் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்: இருவர் கைது!
டார்பியில் சுமார் 200 வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் வெடிபொருட்கள் வைத்திருந்தாகச் சநதேகத்தில் பேரில் இரண்டு பேரைக் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் டார்பியின் வல்கன் வீதியில் கைது பிடியாணை வைத்திருந்து காவல்துறையினர் 40 வயதுடைய ஒருவரையும் 50 வயதுடைய மற்றொருவரும் கைது செய்தனர்.
வெடிச்சத்தம் கேட்கக்கூடும் என்ற பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் 200 வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்வரும் முகவரிகள் வெளியேற்ற மண்டலத்திற்குள் இருப்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது:
• வல்கன் தெரு - முழுமையாக
• ரீவ்ஸ் சாலை - முழுமையாக
• ஷாஃப்டஸ்பரி கிரசென்ட் - முழுமையாக
• ஹாரிங்டன் தெரு - ஹோல்கோம்ப் தெருவிலிருந்து வல்கன் தெரு வரை
• பேஸ்பால் டிரைவ் - கொழும்பு தெருவுக்கு
• கேம்பிரிட்ஜ் தெரு - ரீவ்ஸ் சாலை மற்றும் ஷாஃப்ட்ஸ்பரி கிரசென்ட்டில்
இது ஒரு பயங்கரவாதச் சம்பவமாக இல்லை என்றும் இது சமூகத்திற்கு பொிய ஆபத்து எதுவும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment