இத்தாலியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்


அரசாங்கத்தின் 2026 வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட தேசிய வேலைநிறுத்தத்திற்காக நேற்று வெள்ளிக்கிழமை இத்தாலி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

அடுத்த வாரம் பட்ஜெட் விவாதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அங்கீகரிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இத்தாலியின் CGIL தொழிற்சங்கம், அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களில் சுமார் 61% பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதாக மதிப்பிட்டுள்ளது.

No comments