பாலத்தை புரமைத்த இந்திய இராணுவத்தினர்

இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார்.

பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி  மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய இராணுவத்தினரின் பங்களிப்புடன் இலங்கை இராணுவம் ,வீதி அபிவிருத்தி அதிகார சபை இணைந்து புனரமைப்பு பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுவருகின்ற நிலையில் யாழ் இந்தியத்துணைத்தூதுவர்  சாய் முரளி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  (09)  பார்வையிட்டனர்.

இதன்போது யாழ் இந்தியத்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒப்ரேஷன் சாகர் பந்து  நடவடிக்கையின் மூலம் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் அபிவிருத்தி பணியினை முன்னெடுத்து வருகின்றனர் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ 35 பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியின் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தின் அபிவிருத்தி பணிகள் தற்பொழுது இந்திய இராணுவத்தின் ஒப்ரேஷன்சாகர் பந்து அணியினர் முன்னெடுத்த வருகின்றனர்.

அது மட்டும்  இன்றி தற்பொழுது ஏற்பட்ட வெள்ள  அர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக இதுவரையில் இந்தியா  உணவு மற்றும் உடை மருத்துவம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளது.  அதுமட்டுமின்றி பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கையிலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து தனது உறவை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளர், கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள்  கடற்தொழில் அமைச்சின் செயலாளர் மருங்கன் மோகன் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments