யாழில். பெரு வெள்ளத்திற்குள்ளால் எடுத்து செல்லப்பட்ட பூதவுடல் - மயானத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டடி உயர வெள்ள நீரினை பூதவுடலுடன் கடந்து சென்று தரையில் இறுதி கிரியை செய்யப்பட்டுள்ளது.
குறித்த இந்து மயானம் தொடர்பில் கவனம் செலுத்தி மயானத்தை புனரமைத்து தருமாறும் , மயானத்திற்கு செல்லும் வீதியையும் புனரமைக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி வெள்ள காடாக காணப்படுகிறது. வீதியின் மேலாக சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காலமான நிலையில் , பூதவுடல் தகனம் செய்வதற்காக , சுமார் இரண்டடி உயரத்திற்கு மேலாக பாயும் வெள்ள நீரை கடந்து எடுத்து செல்லப்பட்டது
இந்து மயானத்தில் எரிகொட்டகைகுள்ளும் வெள்ளம் காணப்பட்டமையால் , மயானத்திற்கு ஒரு மேடாக இருந்து ஒரு பகுதியில் வைத்து பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
தமது பகுதியில் உள்ள இந்த இந்து மயானம் தொடர்பில் கவனம் செலுத்தி மயானத்தையும் , அதற்கு செல்லும் வீதியினையும் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment