தையிட்டியில் வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பருத்தித்துறை நகர சபையில் கண்டனம்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் புதன்கிழமை நகர பிதா வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலைமையில் நடைபெற்றது.
அதன் போது , கடந்த ஞாயிற்றுக்கிழமை தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் வேலன் சுவாமி , வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் , வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான , சாருஜன் , பிரபாகரன் மற்றும் பிறேம்ஸ்டன் ஆகியோர் பொலிஸாரினால் தாக்கப்பட்டு , கைது செய்யப்பட்டமைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment