கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளியே வந்த அருச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கைதாகி சில மணி நேரங்களுக்குள் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்கான வழக்கு விசாரணைக்கு நேற்றைய தினம் , நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மன்றில் முன்னிலையாக தவறியமையால் , நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனை அடுத்து கோட்டை போலீஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.
அதனை அடுத்து நாடளுமன்ற உறுப்பினரை நீதிமன்றில் முற்படுத்திய போது , பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
Post a Comment