துருக்கியலிருந்து உக்ரைனுக்குச் சென்ற கப்பல் பற்றி எரிகிறது


உக்ரைனில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷியா நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் ஒடிசா மாகாணத்தில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரோனொமொர்க், ஒடிசா ஆகிய 2 துறைமுகங்கள் மீது டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கடும் சேதமடைந்தன.

குறிப்பாக, குரோனொமொர்க் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி நாட்டின் 3 கப்பல்கள் சேதமடைந்தன. இந்த கப்பல்கள் உணவு தானியங்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வந்தன என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் அதனுள் போருக்குப் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் இருந்தாகக் கூறப்படுகிறது.  துறைமுகங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

No comments