யாழில். கடற்தொழிலாளர்கள் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து முன்னெடுத்த குறித்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
அதன் போது, யாழ் மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஆதியவற்றிலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

Post a Comment