சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்


திட்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பிரதான அனர்த்தம் நிகழ்ந்த இடங்கள் மற்றும் சேதமடைந்த பகுதிகளை தற்காலிகமாகவேனும் சீரமைத்து, நீரை திறந்து விடுவதன் மூலம் பாதிக்கப்பட்ட நெல் வயல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

சேதமடைந்த இடங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்புப் படையினர், விவசாயிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும், அவற்றை விரைவாக சீரமைத்த பின்னர் உரிய விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் திறந்து விடப்படும் எனவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மேலும் குறிப்பிட்டார்.

No comments