அணையா விளக்கு மீண்டும் உடைத்தெறியப்பட்டது


யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும்  உடைத்தெறியப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் ”அணையா விளக்கு” போராட்டம் “மக்கள் செயல்” எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் நடைபெற்ற வேளை அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது.

குறித்த அணையா விளக்கு தூபி கடந்த ஒக்டோபர் மாதமும் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

இதன்பின் அணையா விளக்கு தூபி அன்றைய தினமே மீண்டும் நிறுவப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் மீண்டும் அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபி விஷமிகளால்   உடைத்தெறியப்பட்டுள்ளது.


No comments