அழகு கிறீம் பிடிக்கும் இலங்கை கடற்படை!



நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படை நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றியுள்ளது.. 

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள்,150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. 

கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாததால், நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள்,அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடங்கிய தொகுதியை கடற்படை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments