உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது!



சீரற்ற காலநிலையின் காரணமாக சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர்.எனினும் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று  மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அத்துடன் 352 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே கடந்த 27ஆம் திகதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவால் தொலைதூர மலைப்பகுதி கிராமமான நெலும்கம எனும் கிராமத்தில் இருந்து 22 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மேலும், புயல் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 382ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த 13மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

432 வீடுகள் முழுமையாகவும், 15,688 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.  

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16,621 குடும்பங்களை சேர்ந்த 52,892 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

1,710 குடும்பங்களைச் சேர்ந்த 5,443 அங்கத்தவர்கள் 59 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


No comments