தித்வா: காசு சேர்க்க குழு?
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு நிதியமொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உருவாகும் நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுர அரசின் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, இலங்கை ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் குழுவின் அழைப்பாளராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிசான் பாலேந்திரன், எனும் தமிழர் ஒருவர் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment