கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!


 

யாழ்.நகரிலுள்ள பழைய பூங்காவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்த இலங்கை தமிழரசு;கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் நீதிமன்ற தடையை பெற்றுள்ளார்.

யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது.  

அத்துடன் கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி, அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்திருந்தனர்.

இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


No comments