யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு


தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். 

மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். 

எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் நிலைகுலைந்தது , வீதியில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளனர். 

அதன் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்ததுடன் , மோட்டார் சைக்கிளின் ஓட்டியான மகள் வீதியின் மறுபக்கம் விழுந்துள்ளனர். 

அதன் போது , வீதியின் எதிர் திசையில் வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில் தாயார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

காயமடைந்த மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார்  கழிவகற்றும் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments