யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 

பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் நேற்றைய  தினம் மாலை பொழுது போக்காக , குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடித்துள்ளனர். 

அதன் போது இளைஞன் ஒருவர் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து , அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி காணாமல் போனார். 

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்படையின் சுழியோடி வீரர்கள் குளத்தினுள் இறங்கி தேடி இளைஞனின் சடலத்தை மீட்டனர். 

மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments