புயலால் பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை பெற்று தருமாறு நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் கோரிக்கை


டித்வா புயலின் தாக்கத்தினால் நெடுந்தீவுகடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்தொழிலாளர் சங்க கட்டடம் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரால் , திறந்து வைக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினருடன், கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்கள், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள்,  தேவைகள் குறித்து கலந்துரையாடினர் 

அதன் போது,  டித்வா புயலின் தாக்கத்தினால் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கான வாழ்வாதாரத்தினை பெற்றுத்தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி தீர்வினை பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார். 

No comments