யாழில். 200 கிலோ கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது


யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  , குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார் , வீட்டினுள் இருந்து பெருந்தொகை கஞ்சா பொதிகளை கைப்பறியுள்ளனர். 

அதனை அடுத்து , வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 200 கிலோ என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments