பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டின் எதிரொலி - அமெரிக்காவின் 'கிரீன் கார்ட்' திட்டம் நிறுத்தம்




அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். 

பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். 

இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் இந்த கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதற்கமைய, அமெரிக்கக் குடியுரிமையை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த விசா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியும். 

அந்த வகையில், இந்த ஆண்டும் 'கிரீன் கார்ட்' திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments