யாழில்.போதைப்பொருள் வழக்கில் இருந்து பிணையில் வந்தவர் உயிரிழப்பு


போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இளைஞன் மூன்றாவது நாளே போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்துள்ளார். 

நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , கைது செய்யப்பட்டு  நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் கடந்த 03 நாட்களுக்கு முன்னர் , அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்று பிணை வழங்கி இருந்தது. 

இந்நிலையில் , அவரது வீட்டில் உள்ள அறை ஒன்றில் கதிரையில் அமர்ந்தவாறு , மூச்சற்று காணப்பட்ட நிலையில் , வீட்டார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

அதனை அடுத்து சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , அதிக போதையை நுகர்ந்தமையால் , மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது 

No comments